\
சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றினார் ஆளுநர்..!

சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றினார் ஆளுநர்..!

சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றினார் ஆளுநர்..!
Published on: 

69ஆவது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.

69ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக கொடியேற்றியுள்ளார். இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குடியரசுத் தின விழாவையொட்டி, சென்னை முழுவதும் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியி‌ல் ஈடுபட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com