தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில் ஆளுநர் திடீர் பயணமாக, இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார்.
டெல்லி பயணத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்கிறார். அதனைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
வெள்ளிக்கிழமை வரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லியில் தங்கியிருப்பார் எனவும் கூறப்படுகிறது. மரியாதை நிமித்தமாக பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் உள்ளிட்டோரை ஆளுநர் சந்திக்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.