\
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: கல்விச் செலவை ஏற்கிறது தமிழக அரசு?

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: கல்விச் செலவை ஏற்கிறது தமிழக அரசு?

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: கல்விச் செலவை ஏற்கிறது தமிழக அரசு?
Published on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் தாய் தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளின் கல்வி செலவை தமிழக அரசே ஏற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் படிப்பு முடியும் வரை அவர்களின் கல்வி செலவை ஏற்பதற்கும், மாதந்தோறும் உதவித்தொகை வழங்குவதற்கும் தமிழக அரசு பரீசிலித்து வருவதாக தெரிகிறது. இந்த வகையில் தனியார், மற்றும் அரசு கல்லூரிகளில் கலை அறிவியல் ,பொறியியல் பயிலும் மாணவர்கள் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே டெல்லி மற்றும் கேரள அரசுகள் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்விச் செலவை ஏற்பதாக அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசும் கல்வி செலவை ஏற்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com