\
கொரோனா தொற்று: அரசு சிறப்பு வழக்கறிஞர் மரணம்!

கொரோனா தொற்று: அரசு சிறப்பு வழக்கறிஞர் மரணம்!

கொரோனா தொற்று: அரசு சிறப்பு வழக்கறிஞர் மரணம்!
Published on

கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அரசு சிறப்பு வழக்கறிஞர் தம்பிதுரை, மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

தமிழக அரசின் சிறப்பு வழக்கறிஞராக இருந்துவந்த தம்பிதுரை, அதற்கு முன்னதாக அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும் இருந்த அனுபவம் உடையவர். மூச்சுத் திணறல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதற்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக நள்ளிரவில் காலமானார்.

அவரது திடீர் மரணம் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல், உயர் நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை அவரது மரணம் குறித்த தகவல் தலைமை நீதிபதி அமர்வில் தெரிவிக்கப்பட்டபோது, நீதிபதிகள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். கொடுந்தொற்று நோயான கொரோனா யாரையும் விட்டு வைப்பதில்லை என வேதனை தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com