8 மாவட்டங்கள் தவிர ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் - தமிழக அரசு

8 மாவட்டங்கள் தவிர ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் - தமிழக அரசு
8 மாவட்டங்கள் தவிர ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் - தமிழக அரசு

கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஊரடங்கு உத்தரவில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிற கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் மட்டும் இந்த தடை தொடரும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலை ஊழியர்கள் ஒருமாதத்திற்குள் தடுப்பூசி போடப்பட்டிருக்கவேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை 4 சக்கர வாகனங்களில் மட்டுமே அழைத்துச் செல்லலாம் எனவும் தமிழக அரசு கூறியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com