தமிழ்நாடு
கொரோனா நிவாரணத் தொகையை இன்றைக்குள் வழங்க தமிழக அரசு உத்தரவு
கொரோனா நிவாரணத் தொகையை இன்றைக்குள் வழங்க தமிழக அரசு உத்தரவு
ரேசன் கடைகளில் கொரோனா நிவாரணத் தொகையின் இரண்டாவது தவணை பணம் மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களை இன்றைக்குள் விநியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் திமுக தெரிவித்திருந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் கடந்த மாதம் வழங்கப்பட்டது. இரண்டாவது தவணை நிவாரணத் தொகையான இரண்டாயிரம் ரூபாய் பணத்துடன், 14 மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
பயனாளர்களுக்கு விரைவில் பணம் மற்றும் பொருட்கள் கிடைக்க ஏதுவாக இன்றைக்குள் விநியோகம் செய்திட மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இதுவரை இரண்டாயிரம் ரூபாய் பணம் மற்றும் மற்றும் மளிகைப் பொருட்கள் கிடைக்காதவர்களுக்கு இன்று வழங்கப்படவுள்ளது.