பாஸ்போர்ட் மோசடி வழக்கில் 41 பேர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை - தமிழக அரசு தகவல்

பாஸ்போர்ட் மோசடி வழக்கில் 41 பேர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை - தமிழக அரசு தகவல்
பாஸ்போர்ட் மோசடி வழக்கில் 41 பேர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை - தமிழக அரசு தகவல்

மதுரையில் பாஸ்போர்ட் மோசடி வழக்கில் 41 பேர் மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுரையில் 2019-ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த சிலர் இந்திய பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்றதாக புகார் எழுந்தது. போலி ஆவணங்கள் மூலம் 28 பாஸ்போர்ட்டுகள் பெற்றது தெரியவந்த நிலையில், மதுரை நகர க்யூ பிரிவில் 7 பேர் மீது வழக்குகள் பதிந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அலுவலர்கள், பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் உள்பட 41 பேர் குற்றம் புரிந்துள்ளதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் கண்டறியப்பட்டு விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com