தமிழ்நாடு
“புயல் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க அரசு தவறிவிட்டது” - கமல்ஹாசன்
“புயல் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க அரசு தவறிவிட்டது” - கமல்ஹாசன்
புயல் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் புயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை கமல்ஹாசன் நேரில் சந்தித்தார். அப்போது அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த கமல்ஹாசன், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என உறுதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டித்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் புயல், வெள்ளத்தால் அரசு பாடம் கற்றுக்கொண்ட போதும் எந்த பலனும் இல்லையென கூறினார்.