\
தீபாவளி போனஸ் அறிவிப்பு
தீபாவளி போனஸ் அறிவிப்புஎக்ஸ் தளம்

20 விழுக்காடு தீபாவளி போனஸ்... அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு!

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி, டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி, மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 8,400 ரூபாயும், அதிகபட்சம் 16,800 ரூபாயும் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,75,670 தொழிலாளர்களுக்கு 369 கோடியே 65 லட்ச ரூபாய் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளனர்.

தீபாவளி போனஸ் அறிவிப்பு
TNPSC குரூப் 4 | 2 ஆயிரத்திற்கும் மேல் கூடுதல் பணியிடங்கள் அதிகரிப்பு!

மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாய் கருணைத் தொகையாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com