\
சுதந்திரமாகத்தான் இருக்கிறார்கள் எம்எல்ஏக்கள்: அரசு விளக்கம்

சுதந்திரமாகத்தான் இருக்கிறார்கள் எம்எல்ஏக்கள்: அரசு விளக்கம்

சுதந்திரமாகத்தான் இருக்கிறார்கள் எம்எல்ஏக்கள்: அரசு விளக்கம்
Published on: 

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிமுகவைச் சேர்ந்த 130 எம்எல்ஏக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் முறையிட்டனர். மேலும், இந்த மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரிக்கவும் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை மனுவாகத் தாக்கல் செய்ய டிராபிக் ராமசாமி தரப்புக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அப்போது விளக்கமளித்த தமிழக அரசு வழக்கறிஞர் வி.எம்.ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருப்பதாகத் தெரிவித்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com