காவிரியின் குறுக்கே புதிய மின் திட்டம் அமைக்க கர்நாடகா முயற்சி

காவிரியின் குறுக்கே புதிய மின் திட்டம் அமைக்க கர்நாடகா முயற்சி
காவிரியின் குறுக்கே புதிய மின் திட்டம் அமைக்க கர்நாடகா முயற்சி

காவிரியின் குறுக்கே புதிய மின்திட்டப் பணிகள் மேற்கொள்ள கர்நாடகா அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவம் தமிழக விவசாயிகள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெறுவது தொடர்பாக கர்நாடக முதல்வரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கடந்த வாரம் கர்நாடக அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இருப்பினும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை. காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக தமிழக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் காவிரியின் குறுக்கே புதிய மின்திட்டப் பணிகள் மேற்கொள்ள கர்நாடகா அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவம் தமிழக விவசாயிகள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரியின் குறுக்கே சிவசமுத்திரத்தில் புதிய மின்திட்டத்தை மேற்கொள்ள கர்நாடகா முயற்சிக்கிறது. 893.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கட்டங்களாக இந்த மின்திட்டத்தை செயல்படுத்த கர்நாடகா முடிவு எடுத்துள்ளது. மின்திட்டத்தை 4 ஆண்டுகளுக்குள் முடிக்கவும் கர்நாடகா திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை கர்நாடகம் கோரியுள்ளது. கர்நாடகா அரசின் இந்த புதிய நடவடிக்கை தமிழக விவசாயிகள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com