டெல்லியில் விவசாயிகள் நூதன போராட்டம்

டெல்லியில் விவசாயிகள் நூதன போராட்டம்

டெல்லியில் விவசாயிகள் நூதன போராட்டம்
Published on

டெல்லியில் உடலில் இலை, தழைகளை கட்டியபடி தமிழக விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடன் தள்ளுபடி, இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தினமும் நூதனமான முறையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், நேற்றுமுன்தினம் உடலில் சேறு பூசி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் உடலில் இலை, தழைகளை கட்டியபடி ஆதிவாசிகள் போல் வேடமணிந்த விவசாயிகள், ஜந்தர் மந்தரில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிலர் மனித மண்டை ஓடுகளை கழுத்தில் தொங்க விட்டபடி கலந்து கொண்டனர்.   அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, 

"வறட்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். விவசாயிகளின் பிரச்சினைகளை பிரதமர் நரேந்திரமோடி காது கொடுத்து கேட்பதில்லை. சமூக வலைதளங்களான ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ் புக்’ ஆகியவற்றின் பயன்பாட்டில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஆனால் விவசாயிகள் வறுமையாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மோடி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, இந்தியாவை ‘டிஜிட்டல்’ மயமாக்குவோம் என்று கூறினார். ஆனால் விவசாயிகளின் தற்போதைய நிலைமை கற்காலத்தை நோக்கி செல்வது போல உள்ளது. இதனை உணர்த்தும் வகையில் உடலில் இலை, தழைகளை கட்டிக்கொண்டு ஆதிவாசிகள் போல நூதன போராட்டத்தில் ஈடுபட்டோம். விவசாயிகளின் பிரச்சினை தீரும் வரை எங்களின் போராட்டம் தொடரும்." என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com