நாடாளுமன்ற வீதியில் தமிழக விவசாயிகள் சாலைமறியல்

நாடாளுமன்ற வீதியில் தமிழக விவசாயிகள் சாலைமறியல்

நாடாளுமன்ற வீதியில் தமிழக விவசாயிகள் சாலைமறியல்
Published on

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் நாடாளுமன்ற வீதியில் தமிழக விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்கள் மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். பிரதமர் இல்லம் முன்பாக  
மறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளை டெல்லி போலீசார் கைது செய்தனர். 

கைதான பின் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், “காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு வாரியத்தை அமைத்து தர வேண்டும். தீர்ப்பின் படி மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்காது என்பதால் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும்” என்றார். கைது செய்யப்பட்ட விவசாயிகள் வாகனத்தில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், இன்று மாலைக்குள் வாரியம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com