\
பிரதமர் இல்லம் அருகே போராட்டம்: தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

பிரதமர் இல்லம் அருகே போராட்டம்: தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

பிரதமர் இல்லம் அருகே போராட்டம்: தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தம்
Published on

டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக விவசாயிகளை அம்மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 74 நாட்களாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு மனு கொடுக்கச் சென்றபோது தமிழக விவசாயிகள் சிலர், சாலையில் அமர்ந்து போர‌ட்டத்தில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் டெல்லியில் பாராளுமன்ற தெருவில் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com