ஆஸ்திரேலியப் பிரதமராவது விவசாயிகளை சந்திப்பாரா? நெட்டிசன்கள் கேள்வி

ஆஸ்திரேலியப் பிரதமராவது விவசாயிகளை சந்திப்பாரா? நெட்டிசன்கள் கேள்வி

ஆஸ்திரேலியப் பிரதமராவது விவசாயிகளை சந்திப்பாரா? நெட்டிசன்கள் கேள்வி
Published on

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பிரதமர் மோடிதான் சந்திக்கவில்லை... தற்போது டெல்லி வந்துள்ள ஆஸ்திரேலியப் பிரதமராவது சந்திப்பாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம், இன்று நிர்வாணப் போராட்டம் என்ற அளவிற்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மோடியை எங்களால் சந்திக்க முடியவில்லை.. இனி வேறு வழி இல்லை என்று கூறிய விவசாயிகள் இன்று நிர்வாணமாக போராட்டம் நடத்தினர்.

இது குறித்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

“கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தமிழக அரசின் வேலை என தமிழிசை கூறுகிறார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் தள்ளுபடி செய்வது மத்திய அரசின் கடமை என்கிறார்கள் தமிழக அமைச்சர்கள்..மொத்தத்தில் விவசாயிகளை நட்டாத்தில் விட்டதுதான் மிச்சம்” என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் குமுறியிருக்கின்றனர்.

“இந்திய பிரதமர் மோடி தான் விவசாயிகளை சந்திக்கவில்லை. இந்தியா வந்திருக்கும் ஆஸ்திரேலிய பிரதமராவது சந்திப்பாரா?” எனக் கேட்டிருக்கிறார் ஒருவர்...

“56-அங்குலம் மார்புடைய மோடிக்கு இதயம் இல்லையா?” என்று கேட்கிறது ஒரு ட்விட்டர் பதிவு.

“விவசாயிகள் மட்டுமல்ல இந்தியாவே இன்று நிர்வாணமாகி உள்ளது” எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

“தமிழக அரசாங்கம் இலவசமாக லேப்டாப், ஃபேன், மிக்சி போன்ற இலவச பொருட்களுக்காக 11,561 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது..... வோட்டு தரும் திட்டங்களுக்கு செலவிடும் இந்த பணத்தை ஏன் விவசாயிகளுக்கு செலவிடக்கூடாது?.... விவசாயிகள் போராட்டம் நடத்தும் போது, தமிழக முதலமைச்சரும் அமைச்சர்களும் ஆர்.கே.நகர் தேர்தல் வேலை செய்தனர்... என தமிழக அரசையும் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com