\
குடியரசுத் தலைவருடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு

குடியரசுத் தலைவருடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு

குடியரசுத் தலைவருடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு
Published on

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை தமிழக விவசாயிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த சந்திப்பின்போது, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுடன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் உடன் இருந்தார். வ‌றட்சி நிவாரணம், தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், விவசாயிகளின் பிரச்னைகளை குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்ததாகத் தெரிவித்தார். குடியரசுத் தலைவரை சந்திக்கும் முன்னர், விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து, தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாக மத்திய அரசு அறிவிக்கும் வரை டெல்லியில் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com