தமிழ்நாடு
நிறைவடைந்தது தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு!
நிறைவடைந்தது தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு!
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 7 மணியுடன் நிறைவடைந்தது.
காலை வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் அவரவர் தொகுதிகளில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர். மாலை 6 மணியிலிருந்து 7 மணிவரை கொரோனா நோயாளிகளும் பிபிஇ கிட் அணிந்துவந்து வாக்களித்தனர்.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளிலும், அதேபோல் கேரளாவில் 140 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தற்போது வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது.