காலை 8 மணிக்கு தபால் வாக்குகள், 8.30க்கு மிஷின் வாக்குகள் எண்ணப்படும் - சத்யபிரதா சாகு

காலை 8 மணிக்கு தபால் வாக்குகள், 8.30க்கு மிஷின் வாக்குகள் எண்ணப்படும் - சத்யபிரதா சாகு
காலை 8 மணிக்கு தபால் வாக்குகள், 8.30க்கு மிஷின் வாக்குகள் எண்ணப்படும் - சத்யபிரதா சாகு

தமிழகத்தில் வழக்கம் போல காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும் 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

வரும் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையா என்பது குறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைத்து கட்சிகளுடனும் பேசி வருதாகக் கூறினார்.

வாக்கு எண்ணிக்கைகான மேஜைகளை குறைப்பது பற்றி எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என கூறிய அவர், சிறிய அறையாக இருந்தால் ஒரு அறைக்கு 7 மேஜைகள் என்று இரு அறைகளில் 14 மேஜைகள் கொண்டு வாக்கு எண்ணிக்கை நடத்த திட்டமிருப்பதாக தெரிவித்தார். 8 மணிக்கு தபால் வாக்குகளும் 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com