வாக்கு எண்ணிக்கை: அரசியல் கட்சி முகவர்கள் யார்? பணி என்ன?

வாக்கு எண்ணிக்கை: அரசியல் கட்சி முகவர்கள் யார்? பணி என்ன?
வாக்கு எண்ணிக்கை: அரசியல் கட்சி முகவர்கள் யார்? பணி என்ன?

நாளை வாக்கு எண்ணிக்கை அரசியல் கட்சிகளின் முகவர்களின் முன்னிலயில் நடைபெறும். முகவர் என்பவர் யார்? அவரின் பணிகள் என்ன? வாக்கு எண்ணிக்கையின்போது அவரது பங்கு என்ன என்று பார்க்கலாம்.

அரசியல் கட்சி, வேட்பாளர்களின் நம்பிக்கைக்குரியவர்களே முகவர்களாக நியமிக்கப்படுவார்கள். 18 வயது நிரம்பியவர்கள் முகவர்களாக நியமிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் வேட்பாளர்களின் பிரதிநிதிகளாக முகவர்கள் செயல்படுவர். வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பது முகவர்களின் பிரதான பணி. வாக்கு எண்ணிக்கைக்கு 3 தினங்களுக்கு முன்பாக முகவர்கள் யார் என்பது உறுதி செய்யப்படும். ஒரு வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒரு வேட்பாளருக்கு தலைமை முகவர் உட்பட 15 முகவர்கள் இருப்பார்கள்.

முகவர்களின் பணி தேர்தல் அதிகாரிகளின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் இருக்கும். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடிதமே முகவர்களின் அடையாள அட்டை. தபால் வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் VVPAT இயந்திரங்களின் செயல்பாடுகளை முகவர்கள் முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சி, பதிவு செய்யப்பட்ட கட்சி, சுயேச்சை என்ற அடிப்படையில் முகவர்களுக்கு இடம் ஒதுக்கீடு,

அமைச்சர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பதவி வகிப்போர் முகவராக செயல்பட முடியாது. அரசு அதிகாரிகள், அலுவலர்கள் முகவர்களாக செயல்பட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அரசுப் பணியில் இருப்போர் முகவராக செயல்பட்டது தெரியவந்தால் மூன்று மாதம் சிறை அபராதம் விதிக்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com