Mk Stalin & Vijay
Mk Stalin & Vijay web

சென்னை இறுதி வேட்பாளர்கள் பட்டியல்.. விஜய் போட்டியிடும் தொகுதியில் எத்தனை பேர் தெரியுமா?

மொத்தம் 16 தொகுதிகளில் 419 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், சென்னையில் தேர்தல் சூடு பிடித்துள்ளது.
Published on
Summary

புதுச்சேரி, கேரளா, அசாமில் ஏப்ரல் 9 அன்று வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சென்னையின் 16 தொகுதிகளில் 616 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 173 தள்ளுபடி, 24 வாபஸ் பெறப்பட்டு, இறுதியாக 419 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப் பதிவு முடிந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறவிருக்கிறது .

vijay in perambur
vijay in perambur web

வேட்பு மனு தாக்கல் மார்ச் 30 ஆம் துவங்கி, கடந்த 6 ஆம் தேதி வரை நடந்தது. தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட மொத்தம், 7,599 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. பல வேட்பாளர்கள், தங்கள் பெயரில் கூடுதல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 419 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மொத்தம் 616 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 173 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் 24 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Mk Stalin & Vijay
இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம் | ‘உதயநிதி & எல்.முருகன் கூட்டு சதி’ - ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அவர் உட்பட 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

jio hotstar signs worth rs 4000 crore with tn govt
உதயநிதி ஸ்டாலின்எக்ஸ் தளம்

தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 47 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முக ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில் 35 வேட்பாளர்களும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கத்தில் 26 வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள் .

Mk Stalin & Vijay
"திருட்டுப் பிரதிகளைத் தவிர்க்கவும்.." - ஜனநாயகனுக்காக குரல் கொடுத்த SK | Jana Nayagan | Vijay

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com