'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்

'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்
'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நவ.8 முதல் நவ.17 வரை 10 நாட்கள் அரசு முறைப்பயணமாக ஓபிஎஸ் அமெரிக்கா சென்றுள்ளார். அவர் நவ.8-ஆம் தேதி காலை சென்னையிலிருந்து புறப்பட்டு சிகாகோ சென்றார்.

இதைத்தொடர்ந்து சிகாகோ ஓக் புரூக் டெரஸில், 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக முடிந்தமைக்கான பாராட்டு விழா நடைபெற்றது. அதில், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு தங்க தமிழ் மகன் விருது அளிக்கப்பட்டது. விழாவின்போது, ராஜா கிருஷ்ணமூர்த்தி, சாம்பர்க் மேயர் டாம் டெய்லி , ஓக்ப்ரூக் மேயர் கோபால் ஆல் மலானி, தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மற்றும் உலக தமிழ் இளைஞர் பேரவைத் தலைவர் டாக்டர் விஜய் பிரபாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்நிலையில் சிகாகோவில் அமெரிக்கன் மல்டி எத்தினிக் கோலிஷன் இன்க் (American Multi Ethnic Coalition Inc) சார்பில் நடைபெற்ற குளோபல் கம்யூனிடி ஆஸ்கர்ஸ் 2019 (Global community Oscars 2019) விழாவில் "சர்வதேச வளர்ந்து வரும் தலைவர்-ஆசியா" விருது ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டது. விழாவில் பேசிய அவர், “பொதுவாழ்வில் எனக்கு கிடைக்கும் இந்தப் பதவிகளும், பாராட்டுகளும், விருதுகளும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கும், பேரன்பு கொண்ட தமிழக மக்களுக்குமே உரித்தானவை” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com