தேனி எம்பியுடன் அமெரிக்கா புறப்பட்டார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்

தேனி எம்பியுடன் அமெரிக்கா புறப்பட்டார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்
தேனி எம்பியுடன் அமெரிக்கா புறப்பட்டார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். 

10 நாள் பயணமாக வெளிநாடு செல்வதற்காக நேற்றிரவு துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சென்னை விமான நிலையம் சென்றார். அங்கு துணை முதலமைச்சரை அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் மாலை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்தினர். மேலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது.

பின்னர், அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். விமானம் மூலம் துபாய் செல்லும் ஓ.பன்னீர்செல்வம், அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார். அவருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிகாகோ, ஹுஸ்டன், வாஷிங்டன் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 9ஆம் தேதி மாலை சிகாகோ நகரில் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் துணை முதல்வர் கலந்து கொள்கிறார். அதனைத்தொடர்ந்து 10ஆம் தேதி நடைபெறும் விழாவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 'International Rising Star of the year-Asia Award' விருது வழங்கப்படவுள்ளது. 

12ஆம் தேதி சிகாகோவில் நிறுவனங்கள் தொடர்பான வட்ட மேசை கருத்தரங்கில் கலந்துகொள்ளும் அவர் 13ஆம் தேதியன்று வாஷிங்டன் செல்கிறார். 14ஆம் தேதி ஹுஸ்டன் நகருக்கு செல்லும் அவர் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது தொ‌டர்பாக தொழில் முனைவோர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

அதனைத் தொடர்ந்து 15ஆம் தேதி ஹுஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கான Electronics Donor Board-ஐ தொடங்கி வைக்கிறார். 16ஆம் தேதி நியூயார்க் சென்று அமெரிக்காவாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்வில் பங்கேற்கும் அவர், 17ஆம் தேதி சென்னை திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com