தமிழகத்தில் ஒரே நாளில் 7,010 பேர் டிஸ்சார்ஜ்; கொரோனாவுக்கு மேலும் 99 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 7,010 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதேவேளையில் 99 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் கொண்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளியிடப்பட்ட தகவலில் ஒரே நாளில் 5,789 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,51,738 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 7,010 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,90,966 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1074 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 99 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 22 பேரும் அரசு மருத்துவமனையில் 77 பேரும் உயிரிழந்தனர். இதுவரை மொத்தம் 4,034 பேர் உயிரிழந்துள்ளனர்

