தமிழ்நாடு
”இதுதான் அவர் நோக்கம்..” - சவுக்கு சங்கர் குற்றசாட்டுக்கு செல்வப்பெருந்தகை சொன்ன பதில்!
தன் மீது விமர்சனம் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சவுக்கு சங்கர் தனக்கு வேண்டியவரை காங்கிரஸ் மாநில தலைவராக்க, தன் மீது வேண்டுமென்றே குற்றம்சாட்டுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருக்கிறார். புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கர் வேண்டுமென்றே குற்றம்சாட்டுகிறார் என்றும் தன் மீது புகார் தெரிவிப்பதில் உள்நோக்கம் உள்ளது என்றும் தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, தன் மீது விமர்சனம் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.