மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட 4 நகராட்சிகள்
மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட 4 நகராட்சிகள்pt web

தமிழ்நாட்டில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட 4 நகராட்சிகள்!

தமிழ்நாட்டின் 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Published on

நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

1. நாமக்கல்

நாமக்கல்
நாமக்கல்

நாமக்கல் நகராட்சியின் 39 வார்டுகளுடன், ரெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, காவேட்டிப்பட்டி, லத்துவாடி உள்ளிட்ட 12 ஊராட்சிகளை இணைத்து நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி நாமக்கல் நகர்மன்றக் கூட்டத்தில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்தத் தீர்மானம் நிறைவேறியிருப்பதை நகர்மன்றத்தலைவர், துணைத்தலைவர், மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

2. புதுக்கோட்டை

புதுக்கோட்டை
புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை மாநகராட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, நகர் மன்ற தலைவர், மற்றும் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

3. காரைக்குடி

சிவகங்கை
சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி 36 வார்டுகளை கொண்டதாக உள்ளது. இது பெருநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், தேர்தல் வாக்குறுதியாக அளித்தபடி, காரைக்குடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

கோட்டையூர், கண்டனூர் பேரூராட்சிகள், சங்கராபுரம். தளக்காவூர், கோவிலூர், இலுப்பக்குடி, அரியக்குடி ஊராட்சிகளை இணைத்து காரைக்குடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4. திருவண்ணாமலை

இதேபோல, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலை பகுதிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட 4 நகராட்சிகள்
திடீரென கரை ஒதுங்கிய ஆழ்கடலில் வசிக்கும் ராட்சத மீன்.. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு உயிரிழப்பு!

முன்னதாக நான்கு புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது தொடர்பாக அரசின் உத்தேச முடிவு அறிவிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள முதலமைச்சர், 1998 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு புதிய மாநகராட்சிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கரூர் உள்ளிட்ட ஆறு மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com