தமிழ்நாடு
எடப்பாடி தலைமையில் காவிரி வரைவுத் திட்ட அறிக்கை குறித்து ஆலோசனை
எடப்பாடி தலைமையில் காவிரி வரைவுத் திட்ட அறிக்கை குறித்து ஆலோசனை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காவிரி வரைவுத் திட்ட அறிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்ட அறிக்கை குறித்து மாநிலங்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரைவு திட்ட அறிக்கை குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்று வரைவு திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய பதில்கள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.