
தமிழகத்தில் மணல் அள்ளுவது அடுத்த 3 ஆண்டுகளில் முற்றிலும் நிறுத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
மதுரையில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மணல் விற்பனை தொடர்பான அனைத்து பணிகளும் அரசின் நேரடி மேற்பார்வையில் நடைபெறும் என கூறினார்.
மணலுக்கு மாற்றாக எம்.சாண்டை மக்கள் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, அடுத்த 3 ஆண்டுகளில் மணல் அள்ள முற்றிலும் தடை விதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.