\
திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமிக்கு முதலமைச்சர் பரிசுடன் பாராட்டு

திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமிக்கு முதலமைச்சர் பரிசுடன் பாராட்டு

திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமிக்கு முதலமைச்சர் பரிசுடன் பாராட்டு
Published on

தனக்கு நடக்கவிருந்த பால்ய திருமணத்தை துணிச்சலாக தடுத்து நிறுத்திய 14 வயது பெண் குழந்தை நந்தினியை பாராட்டி தமிழக அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்த 14 வயது சிறுமி நந்தினிக்கு திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்திருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தினி குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை துணிச்சலுடன் தடுத்து நிறுத்தினார். இந்நிலையில் அவரது துணிச்சலை பாராட்டும் விதமாகவும், தேசிய பெண் குழந்தை தினத்தை மு‌ன்னிட்டும் நந்தினிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு பத்திரத்தை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சரோஜா, தலைமைச் செயலாளர்‌ கிரிஜா வைத்தியநாதன் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com