கேரளாவுக்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக முதல்வர் அறிவிப்பு

கேரளாவுக்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக முதல்வர் அறிவிப்பு

கேரளாவுக்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக முதல்வர் அறிவிப்பு
Published on

கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் மேலும் 5 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். 

கன மழையால் கடந்த நூறு ஆண்டுகளில் சந்திக்காத பாதிப்புகளை சந்தித்து வரும் கேரள மாநிலத்திற்கு பல அண்டை மாநிலங்களும் உதவி வருகின்றன. இந்நிலையில்  கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் மேலும் ரூ.5 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே ரூ.5 கோடி அறிவித்துள்ள நிலையில் மேலும் ரூ. 5 கோடி நிதியுதவி அவர் அறிவித்துள்ளார். 

அது மட்டுமின்றி கேரளாவிற்கு நிவாரணப் பொருட்களாக 500 மெட்ரிக் டன் அரிசி, 300 மெட்ரிக் டன் பால் பவுடர், 1,500 லிட்டர்  உயர் வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் வேட்டிகள், கைலிகள், 10 ஆயிரம் போர்வைகள், அத்தியாவசிய மருந்துகளுடன் மருத்துவக்குழுக்களும் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், கேரளாவுக்கு மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், வெள்ளத்தால் ஏற்படக்கூடிய தொற்று நோய்களை தடுப்பதற்கும், மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கும் 25 லட்சம் டாக்சிசைக்கிளின் மாத்திரைகள், நோய் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்டவை கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக 6 லட்சம் எண்ணிக்கையிலான கை உறைகள், பாதுகாப்பானக் குடிநீர் வழங்குவதற்காக குளோரின் மாத்திரைகள் என சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கேரள, தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கிடுமாறும் நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்ட சுகாதாரத் துறையினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com