தமிழ்நாடு
ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம்: பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம்
ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம்: பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையாக இருக்கும் சட்டவிதிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் நடந்துவரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை பொங்கல் பண்டிகையின் போது நடத்த அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு ஒருவாரமே இருப்பதால் அந்த பண்டிகையின் ஒருபகுதியாக நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.