\
ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு

ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு

ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு
Published on: 

ஆளுநர் வித்யாசாகர் ராவை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பன்னீர்செல்வம் அணியினர் எதுவும் தெரிவிக்கவில்லை.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் இன்று நேரில் சந்தித்து பேசினர்.

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். அப்போது அமைச்சர் பாண்டியராஜன், மைத்ரேயன் எம்பி உள்ளிட்டோர் உடன் சென்றனர். இந்த சந்திப்பு குறித்து பன்னீர்செல்வம் அணியினர் எதுவும் தெரிவிக்கவில்லை. சுமார் 20 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com