டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி
Published on

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி செல்கிறார். பிரதமர் மோடியை நாளை சந்தித்து பேச இருக்கிறார்.

கடந்த 19-ம் தேதியன்று அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். அவருடன் மைத்ரேயன் எம்.பி, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோரும் இருந்தனர்.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடியை நாளை சந்திக்க உள்ளார். இதற்காக இன்று மாலை அவர் டெல்லி செல்கிறார். அவருடன் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயரதிகாரிகள் செல்கின்றனர். தமிழகத்தின் வறட்சி நிலவரம் குறித்தும் மத்திய அரசு தரவேண்டிய நிவாரண உதவிகள் குறித்தும் பிரதமரிடம் முதலமைச்சர் மனு அளிப்பார் என்று தெரிகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com