‘பாரம்பரிய இயற்கை உணவுகள்’ - களைகட்டிய மதராசபட்டினம் திருவிழா 

‘பாரம்பரிய இயற்கை உணவுகள்’ - களைகட்டிய மதராசபட்டினம் திருவிழா 
‘பாரம்பரிய இயற்கை உணவுகள்’ - களைகட்டிய மதராசபட்டினம் திருவிழா 

முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரிய இயற்கை உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மதராசபட்டினம் என்ற பெயரில் ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை தீவுத் திடலில் நடைபெறுகிறது. வரும் 15ஆம் தேதி வரை நடைபெறும் நிகழ்ச்சியில், உணவு சார்ந்த தொற்று நோய்கள், நுண்சத்து குறைபாடுகளின் தடுப்பு முறைகள், நமது ஆரோக்கியமான பாரம்பரிய உணவு முறைகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு நடத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "இளம் வயதில் நோய் ஏற்படுவதற்கு உணவு பழக்கமே காரணம். முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளை முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் ருசித்து பார்த்தனர். 

மழை நீர் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பு மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ராஜாஜி ஹால் வரை நடைபெற்ற பேரணியில், சுகாதாரத்துறை பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களான ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com