உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

காஷ்மீர் தாக்குதலில் வீர மரணமடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர், முதலமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த வீரர்களின், அந்தந்த மாநில முதலமைச்சர்கள் வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்து வருகின்றனர். அதன்படி பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார். 

இந்நிலையில் நிவாரண உதவி மட்டும் வீரர்களின் குடும்பத்துக்கு போதுமானதாக இருக்காது என்றும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கினால் உதவியாக இருக்குமென்றும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com