'கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு' முதல்வர் பழனிசாமி

'கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு' முதல்வர் பழனிசாமி
'கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு' முதல்வர் பழனிசாமி

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலுக்கு இன்று காலை 6.45 மணிக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பி துறை உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி "தமிழகத்தின் மூத்த தலைவரான கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி்த் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார் அவர். 

காவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, நேற்று மாலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். கருணாநிதி மறைவை அடுத்து அவரது உடலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இதுதொடர்பாக திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இன்று காலை 8.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

இதற்கிடையே உயிரிழந்த கருணாநிதியின் உடல் அவரது கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டது. பின்னர், அவரது உடல் சிஐடி காலனியில் உள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் கருணாநிதியின் உடல் சென்னை ராஜாஜி அரங்கத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டுள்ளனர். கருணாநிதியின் உடலுக்கு ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com