தமிழ்நாடு
தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனை வழங்குக - மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனை வழங்குக - மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த இரண்டு வாரங்களில் தமிழக்கத்தின் ஆக்சிஜன் தேவை 840 மெட்ரிக் டன்னாக உயரும். தேசிய ஆக்சிஜன் திட்டத்தில் 220 மெட்ரிக் டன் ஒதுக்கியது துரதிர்ஷ்டவசமானது எனவும் அவர் சொல்லியுள்ளார்.
இந்த நெருக்கடியான சூழலில் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனை வழங்க வேண்டும்.
20 ஆக்ஸிஜன் செறிவூட்டி, ஆக்சிஜனை கொண்டு வர தமிழகத்திற்கு ரயில்களை வழங்க வேண்டும் என அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.