\
தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை !

தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை !

தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை !
Published on

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 8 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப் பிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட எட்டு மாவட்ட தேர்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், சேர்த்தல் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. ஏற்கனவே தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக 2 சிறப்பு முகாம்கள் கடந்த மாதம் நடந்தன. இந்த மாதமும் 7 மற்றும் 14ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன. இது தொடர்பாக வடக்கு மாவட்டங்களை சேர்ந்த 8 அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. மேலும் வரும் ஜனவரி 4ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com