மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்துவரும் நிலையில், சேலத்தில் அதிக வெயில் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இந்நிலையில், தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அவர்களிடம்,
“ வெயிலால் வாக்காளார்கள் இருவர் உயிரிழந்து இருக்கிறார்கள் வாக்காளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சத்யபிரதா சாஹூ, “இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியாக இருக்கக்கூடிய ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது . விசாரணை நடைப்பெற்று வருகிறது.” என்றார்.
“ இந்த வெப்ப அலை காரணமாக மாலை 6 மணி ஓட்டுப்போடலாம் என்பதை நேரம் நீட்டிக்கப்படுமா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “இதற்கு தேர்தல் சட்டத்தில் இடமில்லை, இருப்பினும் கடைசி வாக்காளர்கள் ஓட்டு அளிக்கும் வரை வாக்குச்சாவடி செயல்படும்” என்று கூறியுள்ளார்.