நாளை கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தப்படும்- ஆப்ரேட்டர்கள் சங்கம் எச்சரிக்கை

நாளை கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தப்படும்- ஆப்ரேட்டர்கள் சங்கம் எச்சரிக்கை
நாளை கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தப்படும்- ஆப்ரேட்டர்கள் சங்கம் எச்சரிக்கை

டிராயின் புதிய கட்டண விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தம் செய்யப்படும் என தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேபிள் மற்றும் டிடிஹெச் சேவை கட்டணம் பற்றி அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ 153 ரூபாய் ‌40 காசுகளுக்கு தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவித்தது. புதிய மாத கட்டணம் 130 ரூபாய் மற்றும் ஜி.எஸ்டியுடன் சேர்த்து மொத்தம் 154 ரூபாய் வசூலிக்கப்படும். புதிய அறிவிப்பின்படி வாடிக்கையாளர்கள் 100 சேனல்களை ஜனவரி 21-ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படிருந்தது.

அதேநேரம், இந்தக் குறைந்தபட்ச கட்டண திட்டத்தில் எச்.டி. தொழில்நுட்ப சேனல்களை தேர்ந்தெடுக்க முடியாது. எச்.டி. சேனல்கள் அல்லது கூடுதல் சேனல்கள் தேவைப்படுபவர்கள் அதற்குரிய கூடுதல் கட்டணத்தை செலுத்தி பார்க்கலாம். இதுபோல ஒரு சேனலுக்கு அதிகபட்சமாக மாதத்துக்கு ரூ.19-க்கு மேல் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பாத சேனல்களை பார்க்க வேண்டிய அவசியம் இல்ல. அதற்கு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்ற நிலை உண்டாகும்.

இதனிடையே டிராயின் இந்த புதிய கட்டண விதிகளுக்கு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டிராயின் புதிய கட்டண விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தம் செய்யப்படும் என தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com