#TNCabinet: உதயநிதிக்கு கைமாறிய முதல்வர் ஸ்டாலினின் முக்கிய துறை... அது எது தெரியுமா?

#TNCabinet: உதயநிதிக்கு கைமாறிய முதல்வர் ஸ்டாலினின் முக்கிய துறை... அது எது தெரியுமா?
#TNCabinet: உதயநிதிக்கு கைமாறிய முதல்வர் ஸ்டாலினின் முக்கிய துறை... அது எது தெரியுமா?

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பதவியேற்று ஓராண்டு கழித்து தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதன்படி ஏற்கெனவே இருந்த அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டதோடு தமிழக கேபினட்டின் புதிய அமைச்சராக சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தற்போது பதவியேற்றிருக்கிறார்.

அவருக்கு வழங்கப்பட்ட துறை என்ன? மற்ற அமைச்சர்களுக்கு மாற்றப்பட்ட இலாக்காக்கள் என்னென்ன என்பதை விரிவாக காணலாம்:

1) உதயநிதி ஸ்டாலின்

பதவி: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை.

ஒதுக்கப்பட்ட துறைகள்: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள்.

2) இ.பெரியசாமி

பதவி: கூட்டுறத்துறை பதவியில் இருந்து ஊரக வளர்ச்சித் துறை மாற்றப்பட்டிருக்கிறார்.

ஒதுக்கப்பட்ட துறைகள்: ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள்.

3) சு.முத்துசாமி

பதவி: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

ஒதுக்கப்பட்ட துறைகள்: வீட்டுவசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்பு திட்டமிடுதல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, இடவசதிக் கட்டுப்பாடு, அகர திட்டமிடல் மற்றும் நகரப்பகுதி வளர்ச்சி.

4) கே.ஆர்.பெரியகருப்பன்:

பதவி: ஊரக வளர்ச்சித் துறை பதவியில் இருந்து கூட்டுறவுத் துறை மாற்றப்பட்டிருக்கிறார்.

ஒதுக்கப்பட்ட துறைகள்: கூட்டுறவுத் துறை.

5) ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்

பதவி: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

ஒதுக்கப்பட்ட துறைகள்: பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன் மற்றும் கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம்

6) கா.ராமச்சந்திரன்

பதவி: வனத்துறை பதவியில் இருந்து சுற்றுலாத் துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

ஒதுக்கப்பட்ட துறைகள்: சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

7) ஆர்.காந்தி

பதவி: கைத்தறி மற்றும் துணிநூல் துறை

ஒதுக்கப்பட்ட துறைகள்: கைத்தறி மற்றும் துணிநூல் துறை , பூதானம் மற்றும் கிராம தானம்

8) பி.கே.சேகர்பாபு

பதவி: இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை

ஒதுக்கப்பட்ட துறைகள்: இந்து சமயம் மற்றும் அற நிலையங்கள் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்.

9) பழனிவேல் தியாகராஜன்

பதவி: நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை

ஒதுக்கப்பட்ட துறைகள்: நிதித் துறை, திட்டம், மனிதவள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால நன்மைகள் மற்றும் புள்ளியல் துறை

10) சிவ.வீ.மெய்யநாதன்

பதவி: சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை & இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை பதவியில் இருந்து சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

ஒதுக்கப்பட்ட துறைகள்: சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறைகள்.

11) எம்.மதிவேந்தன்

பதவி: சுற்றுலாத் துறையில் இருந்து வனத்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

ஒதுக்கப்பட்ட துறைகள்: வனத் துறை.

இதில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் என்னவென்றால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வசம் இருந்த சிறப்பு திட்டச் செயலாக்கத் துறையும் தமிழக அமைச்சரவையின் 35வது அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின் வசம் மாற்றப்பட்டிருக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com