\
இன்று மாலை 6 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம்

இன்று மாலை 6 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம்

இன்று மாலை 6 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம்
Published on: 

இன்று மாலை 6 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்திருப்பதை அடுத்து தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. கடந்த மாதம் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று 2வது முறையாக நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்திலுள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது, கொரோனா கட்டுப்பாடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பது குறித்தும், கொரோனா 3ஆம் அலை குறித்தும், பிற அரசியல் கொள்கைரீதியான முடிவுகளுக்கு ஒப்புதல் பெறுவது குறித்தும் இந்த ஆலோசனையில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் நிதிநிலை குறித்தும், இந்திய தணிக்கை துறை அறிக்கையில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் இழப்புகள் பற்றி குறிப்பிட்டுள்ளது பற்றியும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com