விமான உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்
விமான உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
ஏற்கெனவே இரண்டு முறை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 30 நிறுவனங்கள் 49 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தக் கூட்டத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் தமிழகத்தில் 11 புதிய தொழிற்சாலைகள் தொடங்க கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வானூர்தி தொழில் பூங்கா தொடர்பான தொழில் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதைப் போல, வேளாண்துறை, உணவுத்துறை, உயர்கல்வித் துறைகள் தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இந்தக் கூட்டத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.