பேரவையில் சசிகலாவுக்கு நன்றி: திமுக கடும் எதிர்ப்பு

பேரவையில் சசிகலாவுக்கு நன்றி: திமுக கடும் எதிர்ப்பு
பேரவையில் சசிகலாவுக்கு நன்றி: திமுக கடும் எதிர்ப்பு

எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்துக்கிடையே பட்ஜெட் உரையை வாசித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழக சட்டப்பேரையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. பட்ஜெட் உரையை நிதி அமைச்சர் ஜெயக்குமார் வாசிக்க ஆரம்பித்தார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எதிர்ப்பையும் மீறி, அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் உரையை வாசித்துக்கொண்டிருந்தார். தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதால், உரையை நிறுத்தினார் அமைச்சர். பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ‘சசிகலா, டிடிவி தினகரன் பெயரை வைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். அவை முன்னவர் செங்கோட்டையன், ‘கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை குறிப்பிடுவது மரபுதான்’ என்றார். இதை திமுக ஏற்காததால் சபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் பட்ஜெட் உரையை அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com