விஜய் மக்கள் இயக்கத்தின் இலவச சட்டஆலோசனை மையம் திறப்பு: அரசியல் ஆதரவைப்பெற தமிழக பாஜக விரும்புகிறதா?

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணி அமைக்க தமிழகத்தில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது..
இலவச சட்ட ஆலோசனை மையம்
இலவச சட்ட ஆலோசனை மையம்PT

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணி அமைக்க தமிழகத்தில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது..

இதனிடையில் சினிமாவில் சாதித்த நடிகர் விஜய், அரசியலிலும் களமிறங்க ஆயத்தமாகி வருவதாக தெரிகிறது. தனது மக்கள் இயக்கத்தை, கிட்டத்தட்ட அரசியல் இயக்கமாகவே நடத்தி வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இதுவரை விலையில்லா மருந்தகம், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களான பால், முட்டை, ரொட்டி வழங்குதல், ஏழை குழந்தைகளுக்கான இரவு நேர பயிலகம் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஏழை-எளிய மக்களின் நலனுக்காக இலவச சட்ட மையம் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக இலவச சட்ட மையம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.. இந்த மையத்தை இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார்.

ஏழை-எளிய மக்கள் சட்ட உதவிகள் பெறுவது தொடர்பாக அவதிபடக்கூடாது என்ற அடிப்படையில், சென்னை கொடுங்கையூர் கே.கே.நகர் 6-வது தெருவில் இலவச சட்ட ஆலோசனை மையம் 9-ந்தேதி இன்று மாலை 6 மணிக்கு திறக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் அப்பகுதி மக்கள் மாலை, வேளைகளில் சட்ட ஆலோசனைகளை பெறலாம். இதுபோல சென்னையின் இதர பகுதிகளுக்கும், பிற மாவட்டங்களுக்கும் இலவச சட்ட ஆலோசனை மையம் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டது அதிமுக. தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டால், வெற்றி பெற கடினம் எனக் கூறப்படுவதால், தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை பல்வேறு கட்சிகளின் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவுக்கு வெளியில் இருந்து நடிகர் விஜய்யின் ஆதரவை பெற அண்ணாமலை முயற்சிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

NGMPC22 - 147

ஆனால் இது முற்றிலுமாக தவறான செய்தி, என்று விஜய் மக்கள் இயக்கம் மறுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com