பாஜக சார்பில் போட்டியிட யாருக்கெல்லாம் வாய்ப்பு? – பட்டியலுடன் டெல்லி செல்லும் நிர்வாகிகள்

தமிழகத்தில் பாஜக சார்பில் யார் யாரெல்லாம் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்களோ அவர்களின் இறுதிப் பட்டியலை தேசிய தலைமைக்கு அளிக்க தயார் செய்யப்பட்டுள்ளது.
பாஜக கூட்டம்
பாஜக கூட்டம்pt desk

செய்தியாளர்: சுரேஷ்குமார்

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பாஜக சார்பில் விருப்பம் தெரிவித்தவர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் அந்தந்த மாவட்டம் வாரியாக நடத்தப்பட்டது. இந்த கூட்டங்களில் முக்கிய தலைவர்கள் பங்கேற்று கருத்துக்களை கேட்டறிந்தனர். இதையடுத்து பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கமலாலயத்தில் இன்று நடைபெற்றது.

TN BJP
TN BJPpt desk

இதில், பாஜக மூத்த நிர்வாகிகள், மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து தமிழக அளவில் ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்? அவர்களில் முக்கிய நிர்வாகிகள் யார்? யார்? கட்சியில் தற்போது அவர்கள் வகிக்கக் கூடிய பொறுப்பு என்ன? என்றும் ஆலோசிக்கப்பட்டது.

அதேபோல் மாற்றுக் கட்சியிலிருந்து பாஜகவுக்கு வந்தவர்கள் எத்தனை பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்? அவர்கள் எங்கெங்கு போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்? இப்படியாக ஒவ்வொருவரின் விவரங்களுக்கும் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எத்தனை ஆண்டுகளாக கட்சி பொறுப்பிலும், கட்சி பணியிலும் செயலாற்றி இருக்கிறார்கள்? ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உள்ளவர்கள் எத்தனை பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்? முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தெந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்? உள்ளிட்ட விபரங்களும் சேகரிக்கப்பட்டன.

PM Modi
PM Modifile

மேலும் தனித் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தர்களில் முக்கிய நபர்கள் யார்? மகளிருக்கு தேர்தலில் போட்டியிட எந்தெந்த இடங்களை கொடுக்கலாம்? போன்ற விவரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட பட்டியல் மற்றும் விபரங்களை எடுத்துக் கொண்டு மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலான நிர்வாகிகள் இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.

பாஜக கூட்டம்
புதுச்சேரி: 72 மணி நேரத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட 9 வயது சிறுமி.. நடந்தது என்ன? முழு விவரம்!

தமிழகத்தில் உள்ள ஒரு தொகுதியில் மட்டும் பாஜக சார்பில் 69 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோன்று காஞ்சிபுரத்தில் 40-க்கும் மேற்பட்டோரும், தென் சென்னையில் 30க்கும் மேற்பட்டோரும், சேலத்தில் 50க்கும் மேற்பட்டோரும் பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் மகேந்திரன் வானதி சீனிவாசன், எச்.ராஜா, பேராசிரியர் ராம.சீனிவாசன், ராமலிங்கம் உள்ளிட்டோரும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Annamalai
Annamalaipt desk

அதே நேரத்தில் தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட வேண்டுமென்று கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த விபரங்கள் அனைத்தும பாஜக தேசிய தலைவர்களிடம் தெரிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com