\
தமிழக பாஜக முன்னாள் தலைவர் மறைவு

தமிழக பாஜக முன்னாள் தலைவர் மறைவு

தமிழக பாஜக முன்னாள் தலைவர் மறைவு
Published on: 

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த கே.என்.லட்சுமணன் மறைந்தார்.

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான கே.என்.லட்சுமணன் சேலம் செவ்வாய் பேட்டையில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். இவர் தமிழக பாஜக தலைவராக 2 முறையும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

இந்நிலையில் 92 வயதான லட்சுமணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு பாஜகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com