மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமல் கேசவ விநாயகம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்; காரணம் என்ன?

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இல்லாமல் மாநில நிர்வாகிகள் திடீரென ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணா தொடர்பாக அண்ணாமலை பேசிய கருத்து சர்ச்சையானதை அடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக பாஜக கூட்டணி இல்லை என்றார். தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டு கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் வழக்கம்போல் நடக்கும் கூட்டம் தான் என பாஜகவினர் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது. ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த பாஜக தலைவர்களோ அதற்கு முன்போ எங்கும் பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்பதை தெரிவிக்கவில்லை. தேசியத் தலைமைதான் அது குறித்து முடிவு எடுக்கும் என தெரிவித்திருந்தனர்.

இன்று நடந்த ஆலோசனைக் கூட்டம் பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் நடைபெற்றது. 5 முதல் 6 மாவட்டங்களுக்கு ஒரு பொறுப்பாளர் என்பதன் அடிப்படையில் அந்த பொறுப்பாளர்களைக் கொண்டு இந்த கூட்டம் நடைபெறுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com