”திமுக அரசு ஒரு செங்கல்லை கூட வைக்கவில்லை” - திடீரென செங்கல்லை தூக்கிய அண்ணாமலை! பரபரப்பான கூட்டம்!

"திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 54- ல், மதுரையில் வேளாண் பல்கலைகழகம் கட்டுவதாக கூறினார்கள் ஆனால்...

நாகர்கோவிலில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, செங்கலைக் காட்டி திமுக ஆட்சியை விமர்சித்தார்.

அந்தக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “தேர்தல் வாக்குறுதிப்படி, மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகளையும், மதுரையில் வேளாண் பல்கலைக்கழகத்தையும் திமுக கட்டித்தரவில்லை” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், "மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என வாக்குறுதி அளித்த திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாகியும் ஒரு வீடுகூட திமுக கட்டித்தரவில்லை" என்று சாடினார்.

"திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 54- ல், மதுரையில் வேளாண் பல்கலைகழகம் கட்டுவதாக கூறினார்கள் ஆனால்..." என்று செங்கலைக் காட்டி திமுக ஆட்சியை விமர்சித்த அண்ணாமலை மீனவர்களுக்கு வீடுகள், மதுரை வேளாண் பல்கலை. கட்டித்தரப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com