தமிழ்நாடு
மகனின் மரணத்தால் நொறுங்கிப் போன பாரதிராஜா.. ஆறுதல் கூறிய அண்ணாமலை!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையில் மறைந்த மனோஜ் பாரதி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி பின்னர் பாரதிராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை ஈசிஆர்-இல் உள்ள பாரதிராஜா இல்லத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மனோஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்ரமணியன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்ட பலரும் மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, இயக்குநர் பாரதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்த தலைவர்கள், ஆறுதல் தெரிவித்தனர்.
அந்த வகையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையில் நேரில் அஞ்சலி செலுத்தி பின்னர் பாரதிராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.