“ஒரு போர்க்களத்தில் நிற்கும் தளபதியாக சீமான் இருக்கிறார்” - ஒரே மேடையில் அண்ணாமலை பேச்சு
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் எஸ்ஆர்எம் தமிழ் பேராயம் சார்பில் தமிழகம் முழுவதும் 9 மண்டலங்களில் ‘சொல் தமிழா சொல்’ நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில், இறுதிச்சுற்று, எஸ் எம் பல்கலைக்கழகம் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசுகையில், “ஒரு போர்க்களத்தில் என்றும் இருக்கக்கூடிய தளபதியாக சீமான் இருக்கிறார். அவர் எடுத்துக்கொண்ட கொள்கையில் நிலையாக கொள்கையாக நிலைத்து நிற்கிறார். எனக்கும் சீமானுக்கும் தனியாக பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன் அவர் தமிழில் தேசியத்தை பார்க்கிறார்
நம்முடைய சாபக்கேடு கல்லூரிகளில் மாணவர் அரசியல் என்பது இல்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும், வேண்டாம்? என்று இங்கு இரண்டு பேருமே அருமையாக பேசினார்கள். தேசியக் கட்சிகள் தேசிய பிரச்சனையை முதன்மையாகவும் மாநிலத்தை அதற்குள் மாநில கட்சிகள் மாநிலத்தில் உள்ள பிரச்சனைகள் முதன்மையாகவும் தேசியத்தில் உள்ள பிரச்சனையை முக்கியமாக வைக்கும் போது அரசியல் மாறும்.
நானும் சீமானும் ஒரே முறை மேடையில் இருப்பதால் சர்ச்சை உருவாகும். மேடைகளில் பேசுவதை விட சமூக வலைத்தளங்களில் ஒரு கருத்தை பதிவிட்டு ஓடி ஒளிந்து விடுகின்றனர். சமூக வலைத்தளங்களில் பேசுவதை விட பொதுவெளியில் வெளிப்படையாக பேச வேண்டும். 6, 7 ம் வகுப்பில் படிக்கும் போது நான் சரியாக பேச மாட்டேன். எனக்கு திக்குவாய், ஒரு பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது பயப்படுவேன்” என்றார்.